ஈஸ்வரன் குழுவினருக்கு தீபாவளி பரிசளித்த சிலம்பரன்

சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஈஸ்வரன்’.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான 40 நாட்களில் முழுவதுமாக முடிந்தது. உடனே படத்திற்கான தன்னுடைய டப்பிங்கையும் முடித்துக் கொடுத்தார் சிலம்பரன்.

அது மட்டுமல்ல படப்பிடிப்பு முடிந்த உடன் படக்குழுவில் பணியாற்றிய 400 பேருக்கும் ஒரு கிராம் தங்கம், வேட்டி, சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசுகளை வழங்கியுள்ளார்.

தீபாவளி தினத்தன்று இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 பொங்கலுக்குபடம் வெளிவருகிறது. 

Read Previous

நவம்பர் 8ம் தேதியில் வெளியான படங்கள்…

Read Next

நவம்பர் 9ம் தேதியில் வெளியான படங்கள்…