சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் இணையும் நட்சத்திரங்கள்

லைக்கா புரொடக்ஷன்ஸ், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘டான்’.

சிவகார்த்திகேயனுடன் ‘டாக்டர்’ படத்தில் இணைந்து நடித்த பிரியங்கா அருள்மோகன் இப்படத்தின் நாயகியாக மீண்டும் இணைந்து நடிக்கிறார். 

எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி ஆகியோரும் நடிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். தற்போது, மேலும் இணைந்து நடிக்க உள்ள நட்சத்திரங்களை அறிவித்துள்ளார்கள்.

நகைச்சுவை நட்சத்திரங்கள் முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கம், ‘குத் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவாங்கி, டிவி தொகுப்பாளர் ஆர்ஜே விஜய் ஆகிய ஐந்து பேர் இப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த சில நாட்களில் ஆரம்பமாக உள்ளதாகத் தெரிகிறது

Read Previous

விதார்த் நடிக்கும் 25 வது படம் 

Read Next

பிப்ரவரி 11ம் தேதியில் வெளியான படங்கள்…

Most Popular