‘டிக்கிலோனா’ படத்தில் இளையராஜாவின் பாடல் ரீமிக்ஸ்

கமல்ஹாசன் நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் படமான 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம்பெற்ற 'கைவச்சாலும் வைக்காம' பாடல் சுவாரசியமான ஹிட் பாடல்களில் ஒன்றாக அமைந்தது. 

சீங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்த, அந்தப் பாடலில் கமல், குஷ்பு, ஊர்வசி, நாகேஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலருக்கும் இடையே நடக்கும் காமெடி கலாட்டா பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. இப்போதும் அந்தப் பாடல் கொண்டாடப்பட்டு வருகிறது. 

அந்தப் பாடலை தற்போது மாடர்னைஸ் செய்து தங்கள் படத்தின் பயன்படுத்தியிருக்கிறது 'டிக்கிலோனா' படக்குழு. 

இதற்கான உரிமையை  இளையராஜாவிடமிருந்து வாங்கி, 'டிக்கிலோனா' படத்துக்காக மாடர்னைஸ் செய்திருக்கிறார் படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. 

‘மைக்கோல் மதனகாமராஜன்’படத்த்தில் இடம் பெற்றது போன்றதொரு காமெடி கலட்டாவை 'டிக்கிலோனா' படத்திலும் இருக்கும் என்கிறது படக்குழு. இதில் ஒரு சிறுபகுதியை மட்டும் 'டிக்கிலோனா' ட்ரெய்லரில் காட்டியிருந்தது படக்குழு. படத்தில் அந்தப் பாடலில் உள்ள காமெடி கலாட்டா ரசிகர்களை கண்டிப்பாக ரசிக்க வைக்குமாம்.

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி சினீஷ் தயாரிப்பில், கார்த்திக் யோகி இயக்கியுள்ள 'டிக்கிலோனா' படத்தில் சந்தானம், யோகி பாபு, ஆனந்தராஜ், அனகா, ஷெரின், முனீஸ்காந்த், 'நான் கடவுள்' ராஜேந்திரன், சித்ரா லட்சுமணம், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, யூடியூப் பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவாளராக ஆர்வி, எடிட்டராக ஜோமின், கலை இயக்குநராக ராஜேஷ், சண்டைக் காட்சிகள் இயக்குநராக தினேஷ் சுப்பராயன், பாடலாசிரியர்களாக அருண்ராஜா காமராஜ் மற்றும் சரவெடி சரண், நடன இயக்குநராக ஷெரீஃப்,  ஆடை வடிவமைப்பாளராக கீர்த்திவாசன் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.

Read Previous

கொரானோ ஊரடங்கில் முடிந்த ரைசா படம்

Read Next

ஆகஸ்ட் 26ம் தேதியில் வெளியான படங்கள்…

Most Popular