’கேப்டன் மில்லர்’ அப்டேட்: 3 கெட்டப்களில் தனுஷ்

’கேப்டன் மில்லர்’ படத்தின் 3 கெட்டப்களில் தனுஷ் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும், இந்தப் படத்தினை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

இதனிடையே, இந்தப் படத்தின் 3 கெட்டப்களில் தனுஷ் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. ஈசா, அனல்ஈசன் மற்றும் மில்லர் ஆகிய கதாபாத்திரங்களில் தனுஷ் நடித்துள்ளார். இதனை சிவராஜ்குமார் அளித்த பேட்டியொன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

Read Previous

‘அயலான்’ படத்தின் கதைக்களம் இதுதானா?

Read Next

ஒரு சின்ன கூட்டம் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறது – தனுஷ்

Most Popular