தனுஷுக்கு நாயகியாக ‘அனிமல்’ நாயகி ஒப்பந்தம்

தனுஷ் நடிக்கவுள்ள இந்திப் படத்தின் நாயகியாக ட்ரிப்டி டிம்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனந்த் எல்.ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான இந்திப் படங்கள் ‘ராஜன்ஹா’ மற்றும் ‘அத்ரங்கி ரே’. இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆனந்த் எல்.ராய் – தனுஷ் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள். ‘தேரே இஸ்க் மெயின்’ எனப் பெயரிடப்பட்டு அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், தனுஷ் தொடர்ச்சியாக தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி வருவதால் இதன் படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் உள்ளது. தற்போது ‘குபேரா’ மற்றும் ‘போர் தொழில்’ இயக்குநரின் படம் ஆகியவற்றை முடித்துவிட்டு ஆனந்த் எல்.ராய் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ்.

இதனால் ‘தேரே இஸ்க் மெயின்’ படத்தின் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. இதன் நாயகியாக ‘அனிமல்’ படத்தின் மூலம் பிரபலமான ட்ரிப்டி டிம்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. சமீபத்தில் ‘பேட் நியூஸ்’ படத்தின் பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் விக்கி கவுசல் உடன் நடித்திருப்பவர் ட்ரிப்டி டிம்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

தேனாண்டாள் தயாரிப்பில் பிரபல யூடியூபர் ஹரி பாஸ்கர் நடிக்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்க்’

Read Next

‘வணங்கான்’ படக்குழுவில் திடீர் மாற்றம்

Most Popular