விஜய் டிவியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
நகைச்சுவை ததும்ப ததும்ப ஒரு சமையல் நிகழ்ச்சியைத் தர முடியுமா என ஆச்சரியப்பட வைத்தார்கள்.
அந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வரும் தீபாவளி தினமான நவம்பர் 14 முதல் ஒவ்வொரு சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சீசன் போட்டியாளர்களாக ஷகிலா, தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, ‘கடைக்குட்டி சிங்கம்’ தீபா, கனி, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஷ்வின் ஆகியோர் இடம் பெறுகிறார்கள்.
கோமாளிகளாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சரத், சுனிதா, விஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் போட்டியாளர்களை தொந்தரவு செய்ய உள்ளார்கள்.
முதல் சீசனை தொகுத்து வழங்கிய ரக்ஷன் இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார்.
நிகழ்ச்சியின் நடுவராக செஃப் வெங்கடேஷ் பட் இருக்கப் போகிறார்.