பிக் பிரின்ட் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்க, பிரித்வி ஆதித்யா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷா குரூப், பிரகாஷ் ராஜ், முனிஷ்காந்த், மைம் கோபி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கிளாப்’.
கொரானோ தளர்வுகளில் சினிமா படப்பிடிப்புகளையும் சேர்த்த பிறகு படக்குழுவினர் உடனடியாக படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பித்து நடத்தினர்.
தற்போது படப்பிடிப்பை முடித்து இறுதிக் கட்டப் பணிகளை ஆரம்பித்துவிட்டார்களாம்.
ஆதி இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். பிரகாஷ்ராஜ் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறாராம்.
தமிழ், மற்றும் தெலுங்கில் இப்படம் வெளியாக உள்ளது.