அமலா பால் கதையின் நாயகியாக நடிக்கும் ‘கடாவர்’

நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் படம் 'கடாவர்'. இப்படத்தின் முன்னோட்டம் நேற்று யு டியுபில் வெளியிடப்பட்டது. 

மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கி இருக்கும் இப்படத்தில் அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மெடிக்கல் கிரைம் த்ரில்லர் படமாகத் தயாராகி இருக்கும் இந்த படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, ஷான் லோகேஷ் படத் தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார்.

கொலை வழக்கு ஒன்றினை போலீஸ் உயரதிகாரி விஷால், தனது தலைமையில் விசாரணையை நடத்துகிறார்.. இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் அமலா பால் நடிக்கிறார். மர்மமான முறையில் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கான விசாரணையை மேலும் விரைவுபடுத்தி, விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கும் தருணத்தில், தடயவியல் துறை நிபுணரான பத்ரா கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் கண்டறிகிறார்.

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று ‘கடாவர்’ வெளியாகிறது. 

Read Previous

குலு குலு – விமர்சனம்

Read Next

பொன்னியின் செல்வன், நடித்ததில் பெருமை – ஜெயராம்

Most Popular