பிக் பாஸ் – ஒளிபரப்பு நேரம் மாற்றம்

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 4ன் ஒளிபரப்பு நேரம் இன்று முதல் (4 ஜனவரி 2021) முதல் மாற்றப்பட்டுள்ளது.

இதுவரையிலும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி இனி, திங்கள் முதல் வெள்ளி வரையில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளார்கள்.

ஆனால், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்குதான் தொடர்ந்து ஒளிபரப்பாகும்.

நிகழ்ச்சி நேரம் மாற்றப்பட்டுள்ளது குறித்து பெரும்பாலான ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள். யு டியூபில் உள்ள புரோமோ வீடியோ கமெண்ட் பகுதிகளில் அது குறித்த அவர்களது கமெண்ட்டுகளை தெரிவித்துள்ளார்கள்.

இன்னும் இரண்டு வாரங்களில் நிகழ்ச்சி முடிய உள்ள நிலையில் இப்படி நேரத்தை மாற்றியதன் காரணம் தெரியவில்லை. 

இன்று முதல் இரவு 9.30 மணிக்கு ‘ராஜா ராணி’ தொடரை ஒளிபரப்ப உள்ளார்கள். ஒரு வேளை இத்தொடரை பிரபலப்படுத்த ‘பிக் பாஸ்’ நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கலாம் என்றே தெரிகிறது.

Read Previous

ஜனவரி 4ம் தேதியில் வெளியான படங்கள்…

Read Next

ஈஸ்வரன் – மாங்கல்யம்…..பாடல் வரிகள் வீடியோ