பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’.
இப்படத்தின் முதல் பார்வை கடந்த வாரம் வெளியானது. ஆர்யாவின் தோற்றத்தைக் கண்டு பல சினிமா பிரபலங்கள் அவரைப் பாராட்டினர்.
இன்று நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ‘சார்பட்டா பரம்பரை’ படத்தைப் பற்றிய தகவல்களையும், சில வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பார்த்த கமல்ஹாசன், ஆர்யாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அது பற்றி, “இதை விட சிறந்த பிறந்தநாள் பரிசைக் கேட்க முடியாது. கமல்ஹாசன் சார், ‘சார்பட்டா பரம்பரை’ பற்றி உங்கள் அன்பால் மிகப் பெரும் மகிழ்ச்சியடைந்தேன். ‘சார்பட்டா’வில் என்னுடைய பணி என்ன என்பதை உங்களுக்குக் காட்டிய இந்த நாள் எனது வாழ்க்கையில் சிறந்த நாள். உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்ததற்கு மில்லியன் நன்றிகள்,” என டிவிட்டரில் அந்த சந்திப்பு குறித்து பதிவு செய்துள்ளார்.