ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்

ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டைன்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ள புதிய படத்தில் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘லாக்கப்’ படத்தை இயக்கிய சார்லஸ் இயக்குகிறார். 

இப்படத்தில் லட்சுமி பிரியா, சுனில் ரெட்டி, கருணாகரன், மைம் கோபி, தீபா ஷங்கர், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

பாலமுருகன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கலை இயக்கத்தை ரவி கவனிக்கிறார். படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.

Read Previous

எதற்கும் துணிந்தவன் – பாமக, வன்னியர் சங்கம் மிரட்டலுக்கு ‘தமுஎகச’ கண்டம்

Read Next

எதற்கும் துணிந்தவன் – விமர்சனம்

Most Popular