லோகேஷ் கனகராஜ் – அல்லு அர்ஜுன், புதிய கூட்டணி

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த வருடம் வெளிவந்த ‘கூலி’ திரைப்படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

அவருடைய அடுத்த படத்தில் நாயகன் யார் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில மாதங்களாகவே இருந்தது. இந்நிலையில் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனை அவர் சந்தித்து கதை சொன்னதாகத் தகவல் வெளியாகி இருந்தது. நேற்றைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அது உறுதியானது.

அல்லு அர்ஜுனின் 23வது படமாக உருவாக உள்ள அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இதற்கு முன்பு அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 1, 2’ படங்களுக்குப் பிறகு மீண்டும் அவருடன் இணைகிறது. தமிழில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’, பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படங்களைத் தயாரித்த நிறுவனம் இது.

லோகேஷ் கனகராஜின் 7வது படமாக உருவாகும் இப்படம் மூலம் அவர் தெலுங்கில் இயக்குனராக நுழைகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் அவருடைய 22வது படத்தையும் தமிழ் இயக்குனராக அட்லீ தான் இயக்கி வருகிறார். மீண்டும் அவர் தமிழ் இயக்குனருடன் இணைவது தெலுங்கு திரையுலகத்தில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

Read Previous

வா வாத்தியார் – விமர்சனம்

Read Next

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்