23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, தமிழ்நாடு அரசு மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக ( NFDC ) ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷனால் ( ICAF ), டிசம்பர் 11, 2025 முதல் டிசம்பர் 18, 2025 வரை நடைபெற இருக்கிறது.
விழா தேதிகள்
டிசம்பர் 11, 2025 முதல் டிசம்பர் 18, 2025 வரை
இடங்கள்
PVR INOX – சத்யம் சினிமாஸ், ராயப்பேட்டை மற்றும் PVR INOX – சிட்டி சென்டர், RK சாலை
தொடக்க விழா
PVR INOX சினிமாஸ் – சத்யம் திரை ( டிசம்பர் 11, 2025 மாலை 6:00 மணிக்கு )
நிறைவு விழா
PVR INOX சினிமாஸ் – சத்யம் திரை (டிசம்பர் 18, 2025 மாலை 6:00 மணிக்கு)
தமிழ் திரைப்படப் போட்டிப் பிரிவைப் பொறுத்தவரை, ICAF பத்திரிகை, வலைத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தமிழ்த் திரைப்படங்களுக்கான விண்ணப்ப செயல்முறை மற்றும் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி நவம்பர் 1, 2025 என நிர்ணயித்தது.
திரைப்பட முன்னோட்டக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 திரைப்படங்கள் டிசம்பர் 8, 2025 அன்று நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும். இந்த ஆண்டும் நாங்கள் 13 விருதுகளை வழங்க இருக்கிறோம்.
ஃபிலிம்ஃப்ரீவே (FilmFreeway ) மூலம் பெறப்படும் உலக சினிமா பிரிவில் விருதிற்கான போட்டி இருக்கும். இப்பிரிவிற்கான ஆதரவு எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. இப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் பட்டியலும் பத்திரிகையாளர்
சந்திப்பில் அறிவிக்கப்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்பிரிவிற்கு நாங்கள் 2 விருதுகளையும் 1 சிறப்புப் பாராட்டையும் சான்றிதழ்களாக வழங்குவோம்.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
CIFF இல் முதல் முறையாக, உலக சினிமா பிரிவில் செயிண்ட் ஹெலினா, ஜார்ஜியா, பின்லாந்து, பிலிப்பைன்ஸ், ஜோர்டான், மியான்மர், நேபாளம் மற்றும் மாண்டினீக்ரோவிலிருந்து திரைப்படங்கள் திரையிடப்படுகின்றது.
இந்திய பனோரமா பிரிவில் பீகாரில் இருந்து ஒரு திரைப்படம் ( போஜ்புரி மொழி)
இந்த ஆண்டு நாங்கள் DG வைஷ்ணவ் கல்லூரியில் இருந்து மாணவர் தன்னார்வலர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள்.
திரைப்பட விழாவில் பங்கேற்க :
டிசம்பர் 10 முதல் ராயப்பேட்டையில் உள்ள PVR INOX சத்யம் சினிமா விழா அலுவலகத்தில் நேரடியாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
: முன்பாகவே ICAF அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ளலாம் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன், E பிளாக், 2வது மாடி, கதவு எண் 4, ஜெமினி பார்ஸன் அடுக்குமாடி குடியிருப்புகள், கதீட்ரல் கார்டன் சாலை, சென்னை – 600 006,
A :89948 28347 / 89390 22618 /98401 51956
இந்த முறை ஆன்லைன் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படவில்லை.
நாடுகளின் எண்ணிக்கை
51
திரைப்படங்களின் எண்ணிக்கை
122
விருந்தினர்கள்
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு வெளிநாட்டு தூதரகங்களின் விருந்தினர்கள் இராஜதந்திரிகள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து திரைப்பட இயக்குநர்கள்
தொடக்கப் படம்
தாரிக் சலேவின் ஈகிள்ஸ் ஆஃப் தி ரிபப்ளிக் ( EAGLES OF THE REPUBLIC)
( பாம் டி’ஓர், கேன்ஸ் திரைப்பட விழா 2025ல் பரிந்துரைக்கப்பட்டவர் )
இறுதிப் படம்
EL 47 (தி 47) மார்செல் பரேனாவின் படம்
ஆஸ்கார் 2026 பரிந்துரைகள் (14 படங்கள்)
யங் மதர்ஸ், தி திங்ஸ் யூ கில், எ போயட், 100 லிட்டர்ஸ் ஆஃப் கோல்ட். இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட், பனோப்டிகான், சவுண்ட் ஆஃப் ஃபாலிங், தி லவ் தட் ரிமெய்ன்ஸ், ஆல் தட்ஸ் லெஃப்ட் ஆஃப் யூ, ஒப்ராஸ் தி டவர் ஆஃப் ஸ்ட்ரெங்த், சென்டிமென்டல் வேல்யூ, மெகெல்லன், சிராட், ஈகிள்ஸ் ஆஃப் தி ரிபப்ளிக்
மற்ற விருது பெற்ற படங்கள்
கேன்ஸ் திரைப்பட விழா 2025 வெற்றியாளர்கள் (6 படங்கள்)
இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட், ( பால்மே டி’ விருது பெற்றவர் ), சென்டிமென்டல் வேல்யூ, சவுண்ட் ஆஃப் ஃபாலிங், யங் மதர்ஸ், தி லிட்டில் சிஸ்டர், எ போயட்
பெர்லின் சர்வதேச திரைப்பட விழா – வெற்றியாளர்கள் (3 படங்கள்)
ட்ரீம்ஸ் ( செக்ஸ் லவ் ) – கோல்டன் பொலின் விருது பெற்றவர், கான்டினென்டல் ’25, பெட்ரனல் லீவ்
புசான் சாவதேச திரைப்பட விழா, ஃபஜர் திரைப்பட விழா, வெனிஸ் திரைப்பட விழா, சான் செபாஸ்டியன் சர்வதேச திரைப்பட விழா மற்றும் லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா போன்ற பிரபலமான திரைப்பட விழாக்களின் படங்களும் திரையிடப்படுகின்றன.
ரஷ்யப் பிரிவு
3 திரைப் படங்கள் ( ரஷ்யன் ஹவுஸினால் தரப்பட்டது )
விம் வெண்டரின் திரைப்படம் ( ஜெர்மன் இயக்குநர் )
5 திரைப் படங்கள்
கரென் ஷக்னசரொவின் முந்தைய திரைப்படங்கள் ( ரஷ்ய இயக்குநர் )
5 திரைப் படங்கள் ( ரஷ்யன் ஹவுஸினால் தரப்பட்டது )
சம கால ஸ்பெயின் திரைப் படங்கள்
4 திரைப் படங்கள் ( ஸ்பெயின் தூதரகம், நியூ டெல்லியால் தரப்பட்டது )
ஜெர்மன் திரைப் படங்கள்
3 திரைப் படங்கள் ( கொதே, சென்னையினால் (GOETHE-INSTITUT) தரப்பட்டது, இதில் சவுண்ட் ஆப் பாலிங் ஆஸ்கார் 2026ற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது
ப்ரென்ச் திரைப்படங்கள்
2 திரைப் படங்கள் ( அல்லையன்ஸ் ப்ரன்சாய்ஸ், சென்னையினால் (ALLIANCE FRANCAISE OF MADRAS )
தாய்வான் திரைப்படங்கள்
2 திரைப் படங்கள் ( எக்கனாமிக் கல்ச்சுரல் ஆபீஸ், சென்னையினால் (ECONOMIC AND CULTURAL OFFICE OF TAIWAN IN CHENNAI) គ្រប់ប
கேரள திரைப்படங்கள்
5 திரைப் படங்கள்
இந்திய பனோரமா
15 திரைப் படங்கள்
(8 – DFF. NFDC யால் கொடுக்கப்பட்டது. ஒப்ராஸ் ( டி டவர் ஆப் ஸ்ட் ரெங்த், இது மொன்ட்னெக்ரொ பிரிவில் ஆஸ்கார் 2026ற்கு செல்ல இருக்கிறது )
தமிழ்ப் போட்டிக்கான திரைப்படங்கள்
12 திரைப் படங்கள்
1. 3 பீ எச் கே
2. அலங்கு
3. பிடிமண்
4. காதல் என்பது பொதுவுடமை
5. மாமன்
6. மாயக் கூத்து
7. மெட்ராஸ் மேட்னி
8. மருதம்
9. ஒன்ஸ் அபோன் அ டைம் இன் மெட்ராஸ்
10. பறந்து போ
11. டூரிஸ்டு பெமிலி
12. வேம்பு
மரியாதை நிமித்தமாக
திரு ஷாஜி அன் கருன் (இந்திய திரைப்பட இயக்குநர் )
இந்தியத் திரைப்படத் துறைக்கு, குறிப்பாக தமிழ்த் திரைப்படத் துறைக்கு திரு ரஜினிகாந்த் அவர்களின் 50 ஆண்டுகாலப் பங்களிப்பு, பாஷாவின் 30 ஆண்டுகாலப் பங்களிப்பு மற்றும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் 60 ஆண்டுகாலப் பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் சுரேஷ் கிருஷ்ணாவின் பாஷா திரைப்படம் திரையிடப்படுகிறது.
மேலும் தமிழ்நாடு எம் ஜீ ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன மாணவர்களின் குறுந் திரைப்படங்களும் திரையிடப்படுகிறது.