சரவன் இயக்கத்தில் ஆதி நடிக்கும் “வீரன்”

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் ”வீரன்” படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியிருக்கிறது. 

‘மரகத நாணயம்’ படத்தினை இயக்கிய இயக்குநரான ஏ.ஆர்.கே. சரவன் ‘வீரன்’ படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். 

படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடையும் தருணத்தில் இருக்கிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ்  2023 கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

நடிகர்கள்: ஹிப்-ஹாப் தமிழா, அதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர்.

இயக்கம்:ஏ.ஆர்.கே.சரவன்,
இசை:ஹிப்-ஹாப் தமிழா,
ஒளிப்பதிவு: தீபக் டி மேனன்,
படத்தொகுப்பு: ஜி.கே பிரசன்னா,
கலை: என்.கே.ராகுல்,
சண்டைப்பயிற்சி: மகேஷ் மேத்யூ,
விளம்பர வடிவமைப்பாளர்: ட்யூனி ஜான்,
படங்கள்: அமீர்,
ஆடை வடிவமைப்பாளர்: கீர்த்தி வாசன்
 

Read Previous

ஒரு படத்தின் ஹீரோ ஸ்க்ரிப்ட் தான் – “தீர்க்கதரிசி” விழாவில் சத்யராஜ் 

Read Next

டிரம்ஸ் சிவமணி இசையில் உருவாகும் ரொமாண்டிக் க்ரைம் த்ரில்லர் படம்