டிவிட்டர் – இந்திய டிரென்டிங்கில் ‘ரஜினி முருகன்’…

 

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பொன்ராம் – சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘ரஜினி முருகன்’.

இந்தப் படத்தின் முதல் பார்வை ஒரு மணி நேரத்திற்கு முன் வெளியிடப்பட்டது. வெளியான சில நிமிடங்களிலேயே டிவிட்டரில் பலரும் ‘ரஜினி முருகன்’ முதல் பார்வையைப் பற்றி ஷேர் செய்தும், ரி ட்வீட் செய்தும் ‘ரஜினி முருகன்’-ஐ இந்திய அளவில் டிரெண்டிங்கில் கொண்டு வந்து விட்டனர்.

தற்போது ‘ரஜினி முருகன்’ இந்திய அளவில் டிவிட்டர் டிரெண்டிங்கில் 5வது இடத்தில் உள்ளது.

இதன் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

Read Previous

கமல்ஹாசனின் வெற்றிப் படங்களின் வரிசையில் ‘உத்தம வில்லன்’

Read Next

Uttama Villain – Official Trailer – 3

Most Popular