பாக்யராஜ் மகன் சாந்தனு நாயகனாக நடிக்கும் ‘வாய்மை’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குனர் ப்ரியா இசைத் தட்டை வெளியிட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர், நடிகர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார்.
“அந்த 7 நாட்கள்’ படத்தின் கிளைமாக்ஸ் படமாக்கும் போது அந்தப் படத்தில் நாயகியாக நடித்த அம்பிகாவிற்கு சரியாக நடிக்க வரவில்லை. அப்போது, என் குரு நாதர் பாரதிராஜாவிடம் சென்று எனக்காக வந்து கிளைமாக்ஸ் காட்சியை எடுத்துக் கொடுங்கள் என்று கேட்டேன்.
அப்போது அவர் படத்தின் கதை என்ன என்று கேட்டார், முழு கதையையும் சொன்னேன். இவ்வளவு அழகாக இந்தப் படத்தை படமாக்கியிருக்கிறாய். இப்போது கிளைமாக்சில் வந்து நான் எடுத்துக் கொடுத்தால், படம் வந்த பின் என்னால்தான் படம் சிறப்பாக வந்தது என்ற பேச்சு எழும். உன்னைப் பற்றி யாரும் பேச மாட்டார்கள் என்றார். அவ்வளவு பெருந்தன்மையாகச் சொன்னார்
.
அது மாதிரிதான் இந்த ‘வாய்மை’ படத்தின் இயக்குனர் அறிமுக இயக்குனர் என்றாலும் அவருடைய மரியாதை கெட்டு விடக் கூடாது என நான் எந்த விஷயத்திலும் தலையிடவில்லை.
நான் கூட முதலில் ஒரு ரிஸ்க்கான கதையை எடுக்கறீங்களே எனக் கேட்டேன். நெத்தியடியா அடிக்கணும்னு இயக்குனர் செந்தில் சொன்னார். அவர் கண்டிப்பா இந்தப் படத்துல வெற்றி பெறுவார் என நான் நம்புகிறேன்,” என கே.பாக்யராஜ் வாழ்த்திப் பேசினார்.