சொப்பன வாழ்வில் – ஒய்.ஜி.எம்.மின் புதிய நாடகம்

யுனைட்டெம் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் நாடகக் குழுவின் 65வது படைப்பாக ‘சொப்பன வாழ்வில்’ என்ற நாடகம் வரும் 20ம் தேதி சென்னையில் அரங்கேற உள்ளது.

திரைப்பட நடிகரும், நாடக நடிகருமான ஒய்ஜிஎம் இயக்கத்திலும், நாடக வடிவாக்கத்திலும் அரங்கேறும் இந்த நாடகத்தில் ஒய்ஜிஎம் நாயகனாக நடிக்கிறார். திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி நடிகையுமான யுவஸ்ரீ நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாடக மேடை ஏறுகிறார். ஒய்ஜிஎம்-க்கு மனைவியாக யுவஸ்ரீ நடிக்கிறார்.

ஒரு அப்பாவியான கொஞ்சம் மனநலம் குன்றிய மனிதனை இந்த சமுதாயம் எப்படிப் பார்க்கிறது, அவன் இந்த சமுதாயத்தை எப்படிப் பார்க்கிறான் என்பதை மையமாகக் கொண்டு இந்த நாடகத்தின் கதையை கோபு – பாபு எழுதியிருக்கிறார்.

இந்த நாடகத்திற்கான முகப்பு இசையை பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.

ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் அரங்கேற உள்ள இந்த நாடகத்தில் நகைச்சுவை, பொருட் சுவை, திகில் சுவை ஆகிய அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும் என இயக்குனர் ஒய்ஜிஎம் தெரிவிக்கிறார்.

 

Read Previous

சோதனைகளை சந்தித்தால்தான் சாதனை – சிவகார்த்திகேயன்

Read Next

ஜெயா டிவி – ஜுன் 20, 21 திரைப்படங்கள்…