“இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி” படங்களுக்குப் பிறகு சுரபி நடித்து வரும் படம் ‘புகழ்’.
இந்தப் படத்தில் ஜெய் ஜோடியாக நடிக்கிறார் சுரபி. இப்படம் பற்றி சுரவி கூறியதாவது,
“இப்படத்தில் எனது கேரக்டரின் பெயர் புவனா. நான் நிஜ வாழ்வில் இருப்பது போன்று, மனதில் உள்ளதை உள்ளபடி எதையும் மறைக்காமல் கூறும் ஒரு நேர்மையான கதாபாத்திரம்.
அதனாலோ என்னவோ இந்தக் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்துப் போனது.
இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் நடித்ததும், ஒளிபதிவாளர் வேல்ராஜ் சாருடன் மீண்டும் இணைந்து பணிபுரிந்ததும் இனிமையான ஒன்று.
மணிமாறன் சுவராசியமான காட்சிகளை பதட்டமில்லாமல் படமாக்கக் கூடியவர். இவரது இயக்கத்தில் வேலையை செய்தது எனக்கு இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் ‘அட்டாக்’ படத்தில் நடிப்பதற்கு ஒரு பயிற்சியாக இருந்தது.
விவேக் மெர்வின் இசையில் அனைத்துப் பாடல்களும் முணுமுணுக்க வைக்கிறது. ‘புகழ்’ படத்தின் டிரைலர் 23ஆம் தேதி வெளிவருகிறது. ஒரு சாதாரண ரசிகை போல் டிரைலரை பார்க்க பெரும் ஆவலாக உள்ளேன்,” எனக் கூறுகிறார் சுரபி.