ஆக்ஷன் டேக் மூவீஸ் தயாரிப்பில், காண்டீபன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி – ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில் உதயா, கனிகா திவாரி, ஜெகன் மற்றும் பலர் நடித்துள்ள ‘ஆவி குமார்’ திரைப்படம் இந்த வார வெள்ளிக்கிழமை 24ம் தேதியன்று வெளியாக உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 150 திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. படத்தின் தலைப்பே இது என்ன மாதிரியான படம் என்பதைப் புரிய வைக்கும்.
த்ரில்லர் படமாகவும், அதே சமயம் கலகலப்பான நகைச்சுவையுடனும் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
உதயா நடித்துள்ள ஒரு படம் அதிகமான திரையரங்குகளில் வெளிவருவது இதுவே முதல் முறை. இந்தப் படம் தனக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என உதயா நம்புகிறார்.