தனுஷ் படங்களை வாங்கிய லைக்கா…

தனுஷின் சொந்தப் பட நிறுவனம் தயாரித்த ‘3, எதிர்நீச்சல், விஐபி, காக்கி சட்டை, காக்கா முட்டை’ ஆகிய படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்ற படங்களாக உள்ளன.

குறிப்பாக தனுஷ் .தயாரித்த ‘காக்கா முட்டை’ உலகத் திரைப்படவிழாக்களில் பிரம்மாண்டமான வரவேற்பையும், உள்ளூர் திரையரங்குகளில் நல்ல வசூலையும் பெற்ற படமாகும்.

தனுஷின் வுண்டர்பார் பி லிட் நிறுவனம் தயாரித்துள்ள அடுத்த படம் ‘விசாரணை’. வெற்றிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, தினேஷ், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம், 72-வது வெனிஸ் சர்வதேசத் திரைப்படவிழாவில் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது. அதுவே இந்தப் படத்தின் தரத்தை உணர்த்தும்.

இப்படத்தை உலக அளவில் வெளியிடும் அனைத்து உரிமைகளையும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் மூலம் ‘விசாரணை’ படத்தின் வணிகப் பரப்பும் எதிர்பார்ப்பும் மேலும் விசாலமாகி இருக்கின்றன.

வுண்டர்பார் பி லிட் நிறுவனத்தின் சார்பில் தனுஷ் தயாரிக்கும் மற்றுமொரு படமான ‘நானும் ரவுடிதான்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

விரைவில் அந்த இரண்டு படங்களும் வெளியாக உள்ளன.

Read Previous

Masala Padam – Evolution Of Cinema – Video Song

Read Next

Yatchan – Parapara… – Song Video