‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் போஸ்டர்களும், டீசர்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தெலுங்கில் இப்படத்தின் டீசர் முன்னணி ஹீரோக்களின் படங்கள் அளவிற்கு யு டியூபில் அதிகமாக ரசிக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம், மறுபக்கம் அனுஷ்காவை செயற்கையான மேக்கப்புகளை வைத்து குண்டாக காண்பித்துள்ளார்கள் என சிலர் சர்ச்சையை எழுப்பினர்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக அனுஷ்கா பேட்டி ஒன்றை சமீபத்தில் கொடுத்துள்ளார். “இந்தப் படத்திற்காக சுமார் மூன்று மாத காலமாக கண்டபடி சாப்பிட்டு 20 கிலோ வரை எடை கூடியுள்ளேன். எந்த செயற்கையான மேக்கப்பும் அதற்காக போடப்படவில்லை.
சில காட்சிகளில் மட்டும் முகம், கை, கால்களை இன்னும் கூடுதலாகக் குண்டாகக் காட்டுவதற்கு ‘ஃபில்டர்களை’ பயன்படுத்தினோம்,” எனக் கூறியிருக்கிறார்.
அடுத்து ‘பாகுபலி 2’ படத்தில் நடிப்பதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முயற்சி எடுத்து வருகிறார் அனுஷ்கா.
சிலர் என்ன செய்தாலும் அதை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதுதான் சிலரது வழக்கமாகிவிட்டது.