நடிகர் சங்கப் பெயரை மாற்ற வேண்டும் – ரஜினிகாந்த்

தென்னிந்திய நடிசர் சங்கத் தேர்தல் இன்று நடைபெறுவதையொட்டி காலையே வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார் நடிகர் ரஜினிகாந்த்.

வாக்களித்த பின் செசய்தியாளர்களிடம் பேசிய அவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என பெயரை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

“நாமெல்லாஒரே சாதி, நமக்குள்ளே எப்பவுமே ஒற்றுமை இருக்கணும். சமீப காலத்துல வந்து சில வாக்குவாதங்கள் நடந்துவிட்டன. அதுக்காக நமக்குள்ள ஒற்றுமை இல்லன்னு சொல்லி மக்கள் ஊடகங்கள் யாருமே நினைக்கக் கூடாது.

ஒரு போட்டி வந்துடுச்சி, யாரு ஜெயிச்சாலும் அவங்களுக்கு என் வாழ்த்துகள்.

அப்புறம், இரண்டு வேண்டுகோள். முதல் வேண்டுகோள், யார் ஜெயிச்சி வந்தாலும் முதலில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை எடுத்து தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என மாற்ற வேண்டும்.

நீங்கள்லாம் ஆயிரம் தடவை யோசிச்சி, நல்லா சிந்திச்சி வாக்குறுதிகள் கொடுத்திருக்கீங்க, உயிரே போனாலும் சரி, ஜெயிச்சி வந்தவங்க, உயிரே போனாலும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றணும். அப்படி நிறைவேற்றாமல் முடியாமல் போய்விட்டால், உடனே ராஜினாமா செய்யுங்க.

அது உங்க மனசுக்கும் நிம்மதி, உங்களுக்கு நல்ல பெயரையும் கொடுக்கும், வருங்காலத்தில் எடுத்துக்காட்டாவும் இருப்பீங்க, ” என ரஜினிகாந்த் பேசினார்.

 

Read Previous

Rudhramadevi – Review

Read Next

ரஜினி கருத்துக்கு எதிராக கமல் கருத்து…