ரஜினி கருத்துக்கு எதிராக கமல் கருத்து…

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

காலையில் வாக்களிக்க வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசும் போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என பெயரை மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சற்று முன் வந்து வாக்களித்த கமல்ஹாசன், ரஜினிகாந்தின் கருத்துக்கு எதிரான ஒரு கருத்தை வலியுறுத்தினார்.

“பல பெரியவர்கள் ஆசையுடன் எழுப்பிய சங்கம் தென்னிந்திய நடிகர் சங்கம். இந்தியாவில் வட இந்தியாவில் ஒன்று இருக்கிறது, தென்னிந்தியாவில் ஒன்று இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால்  தென்னிந்திய நடிகர் சங்கம், இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

உள்ள பிரிவுகள் போதுமானது, எலெக்ஷன் முடிந்ததும் மறுபடியும் எல்லாரும் ஒன்றாக சேர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

தவறுகளை இந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும், அது அவர்களது கடமை, அதை செய்வார்கள்  என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கான சாயல்களும், நேரமும்  இது என்று நான் நினைக்கிறேன்,” என கமல்ஹாசன் தெரிவித்தார்.

 

Read Previous

நடிகர் சங்கப் பெயரை மாற்ற வேண்டும் – ரஜினிகாந்த்

Read Next

பாண்டவர் அணியின் பலமான வெற்றி