5 மில்லியனைத் தாண்டிய ‘வேதாளம்’ டீசர்

சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கும் ‘வேதாளம்’ படத்தின் டீசர் கடந்த 8ம் தேதியன்று வெளியானது.

வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாக 10 லட்சம் பார்வையாளர்களையும் 1 லட்சம் லைக்குகளையும் கடந்து அந்த டீசர் சாதனை படைத்தது.

தற்போது 50 லட்சம் பார்வையாளர்களையும் 1 லட்சத்து 32 ஆயிரம் லைக்குகளையும் பெற்று இந்தியத் திரையுலகில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கும் ‘வேதாளம்’ படத்திற்கான தணிக்கை அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக ‘வேதாளம்’ படம் அமைந்துள்ளது.

Read Previous

அருண் வைத்யநாதன் இயக்கத்தில் அர்ஜுன் – விரைவில் ஆரம்பம்

Read Next

‘பாகுபலி’ 3ம் பாகம் வருமா ? – ராஜமௌலி விளக்கம்