‘இது நம்ம ஆளு’ எப்போது ரிலீஸ், பாண்டிராஜ் விளக்கம்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்து நீண்ட நாட்களாக வெளிவராமல் இருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’.

இந்தப் படம் எப்போது வெளி வருகிறது என்று செய்தியை எழுதி எழுதி அலுத்துப் போய்விட்டது. அந்த அளவிற்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பட வெளியீடு தள்ளிக் கொண்டே போகிறது.

கடந்த சில நாட்களாக இப்படம் டிசம்பரில் வெளிவரும் என்று செய்தி பரவியது.

அது குறித்து சற்று முன் பாண்டிராஜ் அவருடைய டிவிட்டரில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

“இது நம்ம ஆளு’க்காக என் பக்கத்திலிருந்து அனைத்து வேலைகளையும் முடித்துக் கொடுத்து விட்டேன், படத் தொகுப்பு மற்றும் டிரைலர் கூட முடிந்துவிட்டது. உங்களைப் போலவே தயாரிப்பாளர் தரப்பிலிருந்து என்ன பதில் வருகிறது காத்துக் கொண்டிருக்கிறேன்.

‘இது நம்ம ஆளு’ இசை வெளியீடு பற்றியோ, பட வெளியீடு பற்றியோ அறிவிப்பது என் கையில் இல்லை. நவம்பரில் இசை வெளியீடும், டிசம்பரில் பட வெளியீடும் இருக்கம் என நம்புகிறேன், தயாரிப்பாளர்தான் அது பற்றி சொல்ல வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.

இனி படத்தின் தயாரிப்பாளரான டி.ஆரோ அல்லது படத்தின் நாயகனும் அவரின் மகனுமான சிம்புவோதான் தெரிவிக்க வேண்டும்.

ஆனால், சிம்பு டிவிட்டரை விட்டு விலகிவிட்டார், அதனால் அவர்களாக ஏதாவது தகவல் அனுப்பினால் மட்டும்தான் ‘இது நம்ம ஆளு’ பற்றி தெரிய வரும்.

Read Previous

Naanum Rowdy Dhaan – Thangamey… – Full Song – Video

Read Next

‘தூங்காவனம்’ படத்திற்கு ‘யு-ஏ’ சான்றிதழ்