‘தூங்காவனம்’ படத்திற்கு ‘யு-ஏ’ சான்றிதழ்

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ள ‘தூங்காவனம்’ படத்திற்கு ‘யு-ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

‘பாபநாசம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவர உள்ள படம் இது. ‘மன்மதன் அம்பு’ படத்திற்குப் பிறகு த்ரிஷா மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார்.

‘விஸ்வரூபம், உத்தம வில்லன், பாநாசம்’ படங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் இந்தப் படத்திற்கும் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படம் ஓடும் நேரம் 125 நிமிடங்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

வரும் தீபாவளியன்று இப்படம் திரைக்கு வர உள்ளது.

Read Previous

‘இது நம்ம ஆளு’ எப்போது ரிலீஸ், பாண்டிராஜ் விளக்கம்

Read Next

விஷால், கார்த்தியைத் திட்டியது ஏன் ? – இயக்குனர் சேரன் விளக்கம்