நம்பிக்கை தரும் ‘பிச்சைக்காரன்’

விஜய் ஆண்டனி, சத்னா டைட்டஸ் மற்றும் பலர் நடிக்க , சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிச்சைக்காரன்’ மார்ச் மாதம் 4ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் டிரைலரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. முந்தைய விஜய் ஆண்டனி படங்களை விட இந்தப் படம் மீது இன்னும் அதிகமான எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் கேஆர் பிலிம்ஸ் சரவணன் வெளியிடுகிறார். ‘பிச்சைக்காரன்’ படம் நம்பிக்கை தரும் படமாக அமைந்துள்ளது என்று அவர் தெரிவிக்கிறார்.

‘தமிழ் திரை உலகத்தில் தற்போது தரமாமான கதை அம்சம் உள்ள படங்கள் வெளி வருவதும், வெற்றி பெறுவதும் எங்களைப் போன்ற விநியோகஸ்தர்களுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது. அந்த ஊக்கமே ‘பிச்சைக்காரன்’ போன்ற தரமான கதை உள்ள படமும் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையை எங்களுக்குத் தருகிறது.

ரசிகர்களிடமும் திரை அரங்கு உரிமையாளர்களிடமும் இன்று விஜய் ஆண்டனிக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அவரது உழைப்புக்குக் கிடைத்த வெற்றி எனலாம். இயக்குனர் சசிக்கு ரசிகர்கள் இடையே இருக்கும் கண்ணியமான வரவேற்பும் மிகப் பெரியது.

‘பிச்சைக்காரன்’ அதை இரட்டிப்பு செய்யும் என்பதில் எங்களுக்கு அதிகமான நம்பிக்கை உண்டு. எங்களது நிறுவனமான கே ஆர் பிலிம்ஸ் மற்றும் எங்களுடன் இணைந்து இந்தப் படத்தை வெளியிடும் ஸ்கை லார்க் நிறுவனத்தினருக்கும் ‘பிச்சைக்காரன்’ திரைப் படத்தின் வெற்றி மூலம் பெரும் மதிப்பு கிடைக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்கிறார் கே ஆர் பிலிம்ஸ் சரவணன்.

Read Previous

Vil Ambu – Review

Read Next

Yakkai Thiri – Official Song Teaser