‘சவாரி ’ சக்சஸுக்காகக் காத்திருக்கும் சனம் ஷெட்டி

என்டர்டெயின்மென்ட் பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் விஷால் சந்திரசேகர் இயக்கத்தில் பெனிட்டோ ஃபிரான்க்ளின், சனம் ஷெட்டி, கார்த்திக் யோகி, மதிவாணன், டி.எம். கார்த்திக், அருண் அலெக்சாண்டர், பாண்டியன், முனீஷ்காந்த், கவிதாலயா கிருஷ்ணன், லொள்ளுசபா ஈஸ்டர் மற்றும் பலர் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் ‘சவாரி’.

இந்தப் படத்தின் சக்சஸ் தனக்கு தமிழ் சினிமாவில் நல்லதொரு திருப்புமுனையைத் தரும் என படத்தின் நாயகி சனம் ஷெட்டி நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

சவாரி படம் எனக்கு மிக ஸ்பெஷலான படம் . இது முழுக்க முழுக்க ஒரு ஹாலிவுட் பாணி படம் என்று நான் சொல்வேன் . மிக வித்தியாசமான ஸ்டைலில் உருவாகும் இந்தப் படம் ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை .

படத்தில் ஹீரோ பெனிட்டோவின் காதலியாக நான் நடித்துள்ளேன் . கதைப்படி கல்யாணத்தை நோக்கி முன்னேறும் அந்தக் காதலில், திருமண தினத்தன்று கதை வேறு கோணத்தில் விரியும் . பல எதிர்பாராத சுவாரஸ்யமான திருப்பங்கள் நிகழும் .

நடிப்பில் என்னுடைய திறமையை வெளிப்படுத்தும்படியான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் . தரமான படங்களுக்கு ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்களுக்கு எங்கள் சவாரி படம் ரொம்ப பொருத்தமான ஒன்று.

‘சவாரி’ படம் மார்ச் மாத மத்தியில் திரைக்கு வருகிறது . அதன் பிறகு எனது மார்க்கெட் என்பது உறுதி,” என ‘சவாரி’ படத்தின் சக்சஸை இப்போதே கொண்டாடும் ஆசையில் இருக்கிறார் சனம் ஷெட்டி.

Read Previous

2.0 shoot resumes

Read Next

மார்ச் 11-ல் ‘நட்பதிகாரம் 79’ வெளியீடு…