தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் வரும் 20ம் தேதி சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்த பொதுக் குழுவிற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டோர் வர சம்மதம் தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது.
ஆனால், அனைவரது பார்வையும் அஜித் வருவாரா என்பதை நோக்கியே இருக்கிறது.
நடிகர் சங்கத் தேர்தலுக்கு ஓட்டு போடக் கூட வராத அஜித், இந்த பொதுக் குழுவிற்கு மட்டும் எப்படி வருவார் என சிலர் சந்தேகத்துடன் பேச ஆரம்பித்துவிட்டார்களாம்.
இதற்கு முன்பும் நடிகர் சங்கம் நடத்திய எந்த ஒரு கலை விழாவிலும் கூட அஜித் கலந்து கொண்டது கிடையாது.
அதோடு, அடுத்த மாதம் நடிகர் சங்கக் கட்டிட நல நிதிக்காக சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றையும் நடத்த நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது. அதிலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் வர உள்ளார்கள். அதற்கும் அஜித் வருவாரா என்ற பேச்சு இப்போதே ஆரம்பமாகிவிட்டது.
அனைவரது எதிர்பார்ப்பையும் அஜித் நிறைவேற்றுவாரா அல்லது ஏமாற்றுவாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.