‘விசாரணை’ படத்திற்கு 3 தேசிய விருதுகள்

2015ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 63வது தேசிய விருதுகள் சற்று முன் அறிவிக்கப்பட்டன.

அதில் ‘விசாரணை’ படத்திற்கு 4 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த தமிழ்த் திரைப்படம், சிறந்த துணை நடிகர் – சமுத்திரக்கனி, சிறந்த படத் தொகுப்பாளர் – மறைந்த கிஷோர் ஆகிய விருதுகளை இந்தப் படம் பெற்றுள்ளது.

‘தாரை தப்பட்டை’ படத்திற்கு சிறந்த பின்னணி இசை அமைத்ததற்காக இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ‘தாரை தப்பட்டை’ படம் இளையராஜா இசையமைத்து வெளிவந்த 1000மாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

‘இறுதிச் சுற்று’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரித்திகா சிங்கிற்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

மொத்தமாக தமிழுக்கு என்று 4 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

Read Previous

இடுப்புக்கு ‘ஷிப்ட்’ ஆன திருஷ்டிப் பொட்டு…

Read Next

தேசிய விருது, நன்றி தெரிவிக்கும் சமுத்திரக்கனி