தேசிய விருது, நன்றி தெரிவிக்கும் சமுத்திரக்கனி

தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் இணைந்த தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்த ‘விசாரணை’ படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்றுள்ளது குறித்து சமுத்திரக்கனி கூறியிருப்பதாவது,

‘எனது படைப்புகளுக்கும் எனது நடிப்பாற்றலுக்கும் இன்று வரை தாங்கள் அளித்து வரும் அன்பிற்கும் ஆதரவிக்கும் நன்றி.

63வது தேசிய விருது பட்டியலில் எனக்கு சிறந்த துணை நடிகர் விருது, நடிகர் தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரனை’ படத்திற்காக கிடைத்துள்ளது.

எனக்கு இவ்விருது கிடைக்க உறுதுணையாய் இருந்த உங்கள் அனைவருக்கும், ‘விசாரணை’ படக் குழுவுக்கும், தேசிய விருது தேர்வு குழுவுக்கும் எனது நன்றியை இங்கு தெரிவித்து கொள்கிறேன்.

‘விசாரணை’ படத்திற்கு சிறந்த தமிழ் படம் விருதும், காலம் சென்ற படத்தொகுப்பாளர் கிஷோர் அவர்களுக்கு சிறந்த படத்தொகுப்பாளர் விருதும் கிடைக்கப் பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

‘விசாரணை’ படக்குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள். மேலும் தேசிய விருது வென்ற அனைத்து கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகள்.

எனது அடுத்த படைப்பான ‘அப்பா’ விரைவில் வெளிவர உள்ளது. உங்கள் மேலான ஆதரவை எனக்கும், சிறந்த தமிழ் படைப்புகளுக்கும் தொடர்ந்து அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்,” என சமுத்திரக்கனி கூறியுள்ளார்.

Read Previous

‘விசாரணை’ படத்திற்கு 3 தேசிய விருதுகள்

Read Next

‘விசாரணை’க்கு தேசிய விருதுகள், தனுஷ் மும்மடங்கு மகிழ்ச்சி