‘தொல்லைக்காட்சி’ படத்திற்காக ஒரு பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்றது.
தரண் இசையில் நா.முத்துக்குமாரின் வரிகளில் எல்.ஆர்.ஈஸ்வரி குத்துப் பாடல் ஒன்றை பாடினார். நா.முத்துகுமாரின் வரிகளில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் பற்றி நா.முத்துக்குமார் கூறியதாவது, “இந்தப் பாடலில் இருக்கும் வரிகளும் இசையும் அருமையாக இருக்கிறது மீண்டும் ஒரு ‘கலாசலா’ பாடலைப் போல் வெற்றி பெறும் என்று வாழ்த்தினார்,” என்றார்.
கயலாலயா நிறுவனம் சார்பாக பாலசெந்தில்ராஜா இந்த படத்தை தயாரிக்க M.சாதிக்கான் இயக்கத்தில் அஸ்வின், ஜனனி ஐயர், ஆதவன், சுப்பு பஞ்சு, மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இந்தப் பாடலின் படப்பிடிப்பிற்காக கும்பகோணம் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.