‘டார்லிங் 2’ அறிமுக நாயகன் ரமீஸ் ராஜா

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சதீஷ் சந்திரசேகரன் இயக்கத்தில் கலையரசன், காளி வெங்கட், அர்ஜுனன், ஜானி, மாயா மற்றும் பலர் நடிக்கும் ‘டார்லிங் 2’ படத்தில் ரமீஸ் ராஜா என்ற புதுமுகமும் அறிமுகமாகிறார்.

‘டார்லிங் 2’ பட அனுபவத்தைப் பற்றி அவர் கூறுகையில்,

“பள்ளி நாட்களிலும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி, நடிப்பின் மேல் நான் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்தேன். அந்த ஆர்வமே, எனக்கு சில குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று தந்தது.

அந்த சமயத்தில் தான், ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜகன் மூலமாக நான் இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் அவர்களை சந்தித்தேன். சில சந்திப்புகளில் நாங்கள் இருவரும் ‘டார்லிங் 2’ கதைக்குள் ஆழமாக இணைந்து விட்டோம் . அதனைத் தொடர்ந்து, நடிப்பின் நுணுக்கத்தை நன்கு அறிய சில மாதங்கள் பயிற்சியும் மேற்கொண்டேன்.

பொதுவாக புதுமுகத்திற்கு, சினிமா துறையில் அந்த அளவிற்கு ஒத்துழைப்பு இருக்காத நிலையில், என்னுடன் பயணித்த அனைவரும் எனக்கு சிறந்த தூணாக அமைந்திருந்தனர். மேலும், படத்தின் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா அவர்கள், வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களுக்கு அமைந்த ஓர் வரப்பிரசாதம்.

படத்தின் வெளியீட்டு நாளான ஏப்ரல் 1, எங்களுக்கு ஓர் மிகப் பெரிய நாளாக அமையும் என்று நம்புகிறேன். இப்படத்தில் அனைத்து கதை அம்சங்களும் நிறைந்துள்ளது என்று நான் சொல்வதை விட, மக்கள் சொல்லும் நாளை தான் எதிர்பார்துக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார் ரமீஸ் ராஜா.

Read Previous

தொல்லைக்காட்சி – எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய குத்துப் பாடல்

Read Next

Meendum Oru Kadhal Kathai – Mai Pottu Bytes