சென்னை 28 – இரண்டாம் பாகம் ஆரம்பம்

வெற்றி பெற்ற, அதிக வரவேற்பைப் பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை எடுப்பதுதான் தமிழ்த் திரையுலகத்தின் தற்போதைய ‘ஃபேஷன்’ ஆக இருக்கிறது.

அதில், ‘சென்னை 28’ படமும் தப்பவில்லை. வெங்கட் பிரபு இயக்கத்தில் பல நடிகர்கள் நடிக்க 2007ம் ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியையும், வரவேற்பையும் பெற்ற படம் ‘சென்னை 28’.

இன்று இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார் வெங்கட் பிரபு. இன்று காலை பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமானது.

முதல் பாகத்தில் நடித்துள்ள அனைவருமே இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்கள் எனத் தெரிகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ராஜேஷ் கே. நாராயணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Read Previous

‘குற்றப் பரம்பரை’ கோலாகல ஆரம்பம்

Read Next

Kalam – Teaser

Most Popular