ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் ‘எஸ் 3’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்றைய தமிழ் நடிகர்களில் ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக வரவேற்புள்ளவர் சூர்யா மட்டுமே என்று நாகார்ஜுனா கூட சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
‘எஸ் 3’ படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் பலரும் திரண்டு வந்துவிடுகிறார்களாம். அவர்களை ஏமாற்றாமல் சூர்யாவும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொள்கிறார் என படக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
கார்த்தியைத் தொடர்ந்து சூர்யாவும் நேரடித் தெலுங்குப் படத்தில் நடித்தால் அவருக்கு இன்னும் அங்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என்று தெலுங்குத் திரையுலகினரே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
சூர்யாவின் அடுத்த படம் கண்டிப்பாக தமிழ், தெலுங்கில்தான் தயாராகும் என்று தெரிகிறது.