இன்று முகூர்த்த நாள் என்பதால் திரையுலகத்திற்கும் விசேஷம்தான். மூன்று படங்களின் படப்பிடிப்பும், ஒரு படத்தின் இசை வெளியீடும் என தமிழ்த் திரையுலகம் இன்று பரபரப்பாகவே ஆரம்பமாகியுள்ளது.
சூர்யா, சமந்தா, நித்யா மேனன் நடித்துள்ள ‘24’ படத்தின் இசை வெளியீடு இன்று நடக்கிறது.
அதோடு இன்னமும் பெயரே வைக்காத மூன்று படங்களின் படப்பிடிப்பும் இன்று ஆரம்பமாகியுள்ளது.
விஜய் நடிக்கும் படம், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம், வெங்கட் பிரபு இயக்கும் படம் என மூன்று படங்கள் சென்னையில் வெவ்வேறு இடங்களில் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளன.
விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் பரதன் இதற்கு முன் இயக்கிய ‘அழகிய தமிழ் மகன்’ படமும், உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்கும் சுசீந்திரன் இதற்கு முன் இயக்கிய ‘பாயும் புலி’ படமும், வெங்கட் பிரபு இதற்கு முன் இயக்கிய ‘மாசு என்கிற மாசிலாமணி’ படமும் தோல்விப் படங்களே.
சினிமாவில் தோல்வியும், வெற்றியும் நிரந்தரமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தங்களது அடுத்த வெற்றிக்காக தங்களது பயணத்தை இன்று வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளார்கள் அவர்கள்.