‘கபாலி’ டீசர் பல தமிழ்த் திரைப்படங்களின் சாதனைகளை ஒன்றன் பின் ஒன்றாக உடைத்து எறிந்து கொண்டிருக்கிறது.
கடந்த 1ம் தேதியன்று காலை 11 மணிக்கு வெளியான இந்த டீசர் சரியாக 58 மணி நேரங்களுக்குள் 3 லட்சம் லைக்குகளைக் கடந்து புதிய சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது.
வேறு எந்த தமிழ்ப் பட டீசர், ஏன் இந்தியப் படங்களின் டீசர் இந்த அளவிற்கு விரைவாகவும், பரபரப்பாகவும் ஒரு சாதனையைப் படைத்ததில்லை.
விஜய், அஜித் ரசிகர்களை ரஜினி ரசிகர்கள் ‘கபாலி’ டீசருக் சாதனை மேல் சாதனை அளித்து ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.