புதிய சாதனையை நோக்கி ‘கபாலி’ டீசர்

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் டீசர் மூன்று தினங்களுக்கு முன்பு மே 1ம் தேதி காலை 11 மணிக்கு யு டியூபில் வெளியிடப்பட்டது.

வெளியான சில நிமடங்களிலேயே பல புதுப் புது சாதனைகளைப் படைத்து வந்த இந்த டீசர் தற்போது புதியதொரு சாதனையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இதுவரை தமிழ்த் திரைப்பட உலகில் வெளியான டீசர்களில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற டீசராக ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘ஐ’ பட டீசர்தான் இருந்தது. அந்த டீசரை இதுவரை 1 கோடியே 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.

‘கபாலி’ டீசர் தற்போது 1 கோடியே 1 லட்சம் ஹிட்ஸ்களைக் கடந்துள்ளது. இன்னும் 10 லட்சம் ஹிட்ஸ்கள் வந்தால் இந்தப் படம்தான் தமிழ்த் திரையுலகத்தில் முதல் இடத்தைப் பிடிக்கும் டீசராக அமையும்.

ஏற்கெனவே, லைக்குகள் எண்ணிக்கையில் ‘தெறி’ பட லைக்குகள் சாதனையை முறியடித்து ‘கபாலி’ டீசர் முதலிடத்தைப் பிடித்துவிட்டது.

‘கபாலி’ டீசர் படைத்து வரும் சாதனைகள் இன்றைய இளம் ஹீரோக்களை கதிகலங்க வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

Read Previous

Jambulingam 3D from May 13

Read Next

Ilayaraja stays away from National awards