தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாபெரும் தோல்வியடைந்தது.
கடந்த சட்டமன்றத்தில் அ.தி.மு.க. உடன் கூட்டணி அமைத்து 29 தொகுதிகளில் வெற்றி பெற்று, தி.மு.க.வையும் பின்னுக்குத் தள்ளி எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த்.
ஆனால், இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து அவர் தோற்றதோடு டெபாசிட்டையும் இழந்தார். அந்தக் கூட்டணியில் உள்ள யாருமே வெற்றி பெறவில்லை.
விஜயகாந்தின் இந்த மோசமான தோல்வியை தெலுங்கு மீடியாக்கள் பலமாகக் கிண்டலடிக்கின்றன.
‘ஜீரோ ஆன ஹீரோ’ எனக் குறிப்பிட்டு, மாநில கட்சி அந்தஸ்தையும் விஜயகாந்த் இழக்கப் போகிறார் என செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.
தெலுங்குத் திரையுலகிலும் சிரஞ்சீவி தனிக் கட்சி ஆரம்பித்து, அதன் பின் கட்சியைக் கலைத்து, அடுத்து காங்கிரசுடன் இணைந்து மத்திய மந்திரியகாவும் இருந்து, தற்போது அரசியலை விட்டே ஒதுங்கி படத்தில் நடிக்க வந்துவிட்டார்.
சிரஞ்சீவி அளவிற்கு குறுகிய காலத்தில் அரசியலில் இங்கு வேகமாக வளர்ந்தவர் விஜயகாந்த். இப்போது சிரஞ்சீவியைப் போலவே அரசியலில் இருந்து ஒதுங்குவாரா அல்லது தொடர்ந்து அரசியல் பணியில் ஈடுபடுவாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.