அனைவரது பாராட்டில் வெளியாகும் ‘அப்பா’

ஒரு திரைப்படம் வெளியான பிறகுதான் படத்தைப் பார்த்துவிட்டு, அந்தப் படம் நன்றாக இருந்தால் மட்டுமே பலரும் பாராட்டுவார்கள்.

ஆனால், ஒரு படம் வெளியாவதற்கு முன்பே அனைவரது பாராட்டுக்களையும் பெற்று அந்தப் பாராட்டுக்களுடன் வெளியாகிறது.

அந்தப் படம்தான் ‘அப்பா’. சமுத்திரக்கனி இயக்கம் நடிப்பில் தம்பி ராமையா, ‘காக்கா முட்டை’ மணிகண்டன், ‘அம்மா கணக்கு’ யுவலட்சுமி, ராகவ்கே, பிரில்லா, நசத், திலீபன் மற்றம் பலரது நடிப்பில் இப்படம் நாளை வெளியாகிறது.

இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் பெற்ற பிள்ளைகளை வளர்க்கும் ‘அப்பா’க்களைப் பற்றிய படம்.

தன்சி படம் மீதிருந்த நம்பிக்கையில் சில நாட்களுக்கு முன்பே பத்திரிகையாளர் காட்சியைப் போட்டார் இயக்குனர் சமுத்திரக்கனி. படத்தைப் பார்த்த அனைவருமே படம் பற்றி பாராட்டித் தள்ளிவிட்டார்கள்.

திரையுலகத்தில் உள்ள பலரும் இந்தப் படம் பற்றி பாராட்டி வருகிறார்கள்.

இப்படி அனைவரது பாராட்டிலும் வெளியாகும் ‘அப்பா’ படத்தை பெற்றோர்களும், இனி பெற்றோர் ஆகப் போகிறவர்களும், பிள்ளைகளும் தவறாமல் பார்க்க வேண்டும் என்கிறார் சமுத்திரக்கனி.

அவர் எதற்காகச் சொல்கிறார் என்பது படம் பார்த்தபின் உங்கள் அனைவருக்குமே புரியும்….?

Read Previous

திருப்பு முனை கொடுத்தவரை திணறடிக்கும் சிம்பு

Read Next

Amala Paul says thank you