தலைப்பைப் பார்த்ததும் அரசியல் செய்தி என நினைத்துவிட வேண்டாம், இது ஒரு சினிமா செய்திதான்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ படங்களை இயக்கிய பொன்ராம்-ன் உதவியாளர் தளபதி இயக்க உள்ள புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
இந்தப் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ளது.
படத்தின் இசையமைப்பாளர், நாயகி மற்ற கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.