‘தொடரி’ – 2 நாளில் 11 கோடி வசூல்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 22ம் தேதி வெளிவந்த படம் ‘தொடரி’.

தமிழ்நாட்டில் 400 தியேட்டர்களுடன் சேர்த்து உலகம் முழுவதும் சுமார் 2000 தியேட்டர்களில் இப்படம் வெளியானது.

உணர்வுபூர்வமான காதல் படத்தை வித்தியாசமான பின்னணியில், கதைக்களத்தில் படமாக்கும் பிரபு சாலமன் ‘தொடரி’ படத்தை முழுக்க முழுக்க ரயில் பின்னணியில் உருவாக்கியிருந்தார்.

ஓடும் ரயிலில் முழு படமும் எடுக்கப்படுவது தமிழில் இதுவே முதல் முறை. ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும் ‘தொடரி’ படம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 11 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

தனுஷ் நடித்து வெளிவந்த படங்களிலேயே இரண்டு நாட்களில் அதிக வசூலைப் பெற்ற படம் ‘தொடரி’ என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றிலிருந்து விடுமுறை தினம் என்பதால் இனி வரும் நாட்களில் இந்த வசூல் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

Aandavan Kattalai Review & Rating

Read Next

இரண்டு ‘சூப்பர் ஸ்டார்கள்’ சந்திப்பு