‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் இயக்குநர் சுசீந்திரன் , விஷ்ணு விஷால், பார்த்திபன், ஸ்ரீ திவ்யா, தயாரிப்பாளர் Ice Wear சந்திர சாமி, D.N. தாய் சரவணன் , இசையமைப்பாளர் இமான் , ஒளிப்பதிவாளர் A.R. சூர்யா , யுகபாரதி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக அம்மா கிரியேஷன் டி.சிவா , இயக்குநர் பா.ரஞ்சித் , பாண்டி ராஜ் , சீனு ராமசாமி, ரவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் இயக்குநர், நடிகர் பார்த்திபன் பேசியதாவது,
“இக்காலத்தில் சினிமா ரசிகர்கள் அனைவரும் சினிமாவை மிகவும் கவனமாகப் பார்க்கிறார்கள். நாம் சின்ன தவறு செய்தால் கூட அதை கண்டுபிடித்து விடுகிறார்கள்.
உதாரணத்துக்கு இதை எடுத்துகொள்ளலாம் “நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் தொடரி திரைப்படத்தில் 150 km வேகத்தில் செல்லும் இரயிலில் கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் தூக்கவில்லை “ என்ற ஓர் விஷயம் ரசிகர்களால் வாட்ஸ் அப்பில் பகிரப்படுகிறது. யுகபாரதி நான் நன்றாக வசனம் பேசியுள்ளேன் என்று கூறினார். ஆனால் அந்த வசனம் நன்றாக இருந்ததால்தான் என்னால் அந்த வசனத்தை நன்றாக கூற முடிந்தது.
இயக்குநர் சுசீந்திரன் எப்போதும் Perfect ஆக படத்தை இயக்கும் ஓர் இயக்குநர். இயக்குநர் பிரபுதேவா ஒரு நாயகிக்கு நடனம் கற்று கொடுக்க இரண்டு நாள், Perfectionனுக்கு 8 நாள் ஆகும் என்று கூறினார். அதே போல் Perfectionனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர் சுசீந்திரன்.
இப்படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீ திவ்யாவை மிகச் சிறந்த நடிகை எனலாம். ஏனென்றால் நான் அழவேண்டிய காட்சியில் இயக்குநர் சுசீந்திரன் ஸ்ரீ திவ்யாவை Glycerin போடுமாறு கூறியதும் அவர் மறுப்பேதும் கூறமால் அக்காட்சி நன்றாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் முகம் பிரேமில் வராது என்று தெரிந்தும் நடித்தார். படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்தார்கள். இப்படத்துக்கு பின்னர் விஷ்ணு, மகா விஷ்ணுவாக மாறிவிடுவார்,” என்றார்.
விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது,
“இப்படத்துக்காக இசையமைப்பாளர் இமான் மிகச் சிறப்பான பாடல்களை வழங்கியுள்ளார். அவர் கூறியது போலவே இப்படத்துக்கு இதயத்தில் இருந்து பாடல்களைத் தந்துள்ளார். எனக்கு நடிகர் பார்த்திபனை விட இயக்குநர் பார்த்திபனை மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அவர் உலக நாயகன் கமல்ஹாசனைப் போல், சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமாவில் முதலீடு செய்பவர்.
விஷ்ணு விஷால் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்துக்கு பின்னர் இப்படத்துக்காக நான் விஷ்ணு விஷாலுடன் எட்டு வருடத்துக்கு பிறகு அதே கணக்கம்பட்டி சென்றிருந்தேன். அங்கு மக்கள் எங்களை நன்றாக ஞாபகம் வைத்து எங்களுடன் பேசி படபிடிப்பு நன்றாக நடக்க ஒத்துழைத்தனர்.
விஷ்ணு விஷாலுடன் நான் இது வரை மூன்று திரைப்படங்கள் இணைந்து பணியாற்றிவிட்டேன். நான்காவது திரைப்படத்தில் அவருடன் இணைய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நன்றாக நடக்க மிக முக்கிய காரணமாக இருந்த என் தம்பி தாய் சரவணனுக்கு நன்றி. அவர் தான் அனைவரையும் ஒருங்கிணைத்து படப்பிடிப்பு நன்றாக நடக்க உதவினார். ‘மாவீரன் கிட்டு’ நான் எடுத்த படங்களில் மிகச் சிறந்த படமாகவும், கமர்ஷியலாக வெற்றி பெறும் படைப்பாகவும் இருக்கும்,” என்றார் இயக்குநர் சுசீந்தரன்.