தமிழிலும் வெளிவரும் ‘காஸி’

பி.வி.பி சினிமா , மேட்னீ எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இனைந்து வழங்கும் படம் ‘காஸி’.

ராணா டகுபதி, டாப்ஸி, நாசர், கே.கே.மேனன், அதுல் குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மறைந்த பழம்பெரும் நடிகரான ஓம்பூரி நடித்த கடைசி திரைப்படம் இது.

மிக பிரம்மாண்டமான படைப்பாக உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சங்கல்ப் இயக்கியுள்ளார்.

இப்படம் யாராலும் வீழ்த்த முடியாத நீர் முழ்கிக் கப்பலான ‘PNS காஸி’யைப் பற்றி மிக ஆழமாகப் பேசும் ஒரு படைப்பு.

மதி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, கே இசையமைக்கிறார்.

பி.வி.பி சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்திய கடற்படையின் பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் இந்த வருடத்தில் இப்படம் வெளிவருவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

போர்க்களத் திரைப்படமாக உருவாகியுள்ள ‘காஸி’ இந்த மாதம் திரைக்கு வருகிறது.

Read Previous

‘கண்டேன் காதல் கொண்டேன்’ – ‘லிவிங் டு கெதர்’ கதை…

Read Next

Lakshmi Kalyanam, new serial in Vijay Tv

Most Popular