‘சி 3’ படத்திற்குப் பிறகு ஹரி இயக்க உள்ள ‘சாமி 2’ படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
2003ம் ஆண்டில் வெளிவந்த ‘சாமி’ படம் மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்திற்கு முன்பாக த்ரிஷா நாயகியாக நடித்த ‘மௌனம் பேசியதே, மனசெல்லாம்’ ஆகிய படங்கள் த்ரிஷாவுக்கு பெரிய பெயரை பெற்றுத் தரவில்லை.
‘சாமி’ படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் த்ரிஷா முன்னணி ஹீரோயினாக வளர ஆரம்பித்தார்.
சுமார் 14 வருடங்கள் கழித்து உருவாக உள்ள ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் த்ரிஷா நடிக்க உள்ளார். இப்படம் த்ரிஷாவின் 62வது படம்.
விக்ரம் ஜோடியாக இதற்கு முன் ‘சாமி, பீமா’ ஆகிய படங்களுக்குப் பிறகு சுமார் 9 வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க உள்ளார் த்ரிஷா.
‘சாமி 2’ படத்தில் நடிப்பது குறித்து,
“என்னுடைய முதல் சூப்பர்ஸ்டார் ஹீரோ விக்ரம் மற்றும் ஹரி சார் மூன்றாவது முறையாக இணையும் படம், ஷிபு தமீன் தயாரிக்க, சிறந்த திறமைசாலி ஹாரிஸ் ஜெயராஜ்…நாங்கள் மீண்டும் இணைகிறோம்.
இதை ஒரு வட்டம் என்று சொல்ல மாட்டேன். ஆனாலும், எங்கு ஆரம்பித்தேனோ மீண்டும் அங்கேயே திரும்ப செல்கிறேன். ‘சாமி 2’ படத்தில் நானும் இணைந்துள்ளேன். டபுள் ஆக்ஷன், டபுள் காதல், த்ரிஷா 62, ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா.