‘பாகுபலி 2’ – முதல் நாள் வசூல் எவ்வளவு ?

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் சுமார் 8000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ‘பாகுபலி 2’ திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியானது.

எதிர்பார்த்தது போலவே உலகம் முழுவதும் படத்திற்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

முதல் நாள் வசூல் 100 கோடியைத் தாண்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

120 கோடி, 150 கோடி, 200 கோடி என முதல் நாள் வசூல் பற்றி மாறுபட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

தயாரிப்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் பட்சத்தில்தான் உண்மை நிலவரம் என்ன என்பது தெரிய வரும்.

இருந்தாலும் ஒரு தெலுங்குப் படம் இந்திய அளவிலும், உலக அளவிலும் ஒரு புதிய இந்தியத் திரைப்படச் சாதனையை தினம் தினம் படைத்து வருகிறது என்பது மட்டும் உறுதி.

‘பாகுபலி 2’ படத்தின் முதல் நாள் வசூலாக அதிகபட்சமாக கண்ணில் பட்ட தகவல் இதுதான்…

தமிழ்நாடு வசூல் – 11 கோடி

ஆந்திரா, தெலுங்கானா – 58 கோடி

கர்நாடகா – 19 கோடி

கேரளா – 6 கோடி

வட இந்தியா, பிற மாநிலங்கள் – 58 கோடி

வெளிநாடுகள் – 60 கோடி

மொத்தம் – 212 கோடி

பங்குத் தொகை (ஷேர்) – 121 கோடி.

முதல் வார இறுதி வசூல், முதல் வார வசூல் என ‘பாகுபலி 2’ படம் அடுத்தடுத்து பல புதிய சாதனைகளை படைக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

1000 கோடி வசூலை ‘பாகுபலி 2’ படம் கடந்து மிகப் பெரும் சாதனையை நிகழ்த்தப் போகிறது என திரையுலகத்தினர் அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Read Previous

தமிழ் சினிமாவை மாற்றியது பாரதிராஜா – மணிரத்னம்

Read Next

Vijay Tv May Day Special Programmes 2017