ஒரு மணி நேரத்தில் நடக்கும் கதை ‘கிரகணம்’

கே.ஆர்.பிலிம்ஸ் சார்பில் சரவணன், கார்த்திக், ஹயாசி இன்டர்நேஷனல் சார்பில் சிவக்குமார் தயாரிக்க இளன் இயக்கத்தில் ‘கயல்’ சந்திரன், கிருஷ்ணா, அறிமுக நாயகி நந்தினி, மற்றும் கருணாஸ் , கருணாகரன், ஜெயபிரகாஷ், பாண்டி மற்றும் சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘கிரகணம்’.

புதிய கோணத்தில் சொல்லப்படும் ஒரு புதிய கதைதான் ‘கிரகணம்’ என்கிறார் இயக்குநர் இளன்.

“சந்திர கிரகணம் நிகழும் ஒரு நாள் இரவில் கதையின் கதாபாத்திரங்கள் வாழ்விலும் இருள் சூழ்கிறது. அந்த இருள் ஒரு மணி நேரம் தான். அந்த ஒரு மணி நேரத்திற்குள் அவர்களின் வாழ்வில் என்னென்ன திருப்பங்கள் வருகிறது என்பதை பரப்பரப்பாகவும், திகிலாகவும் திரைக்கதை அமைத்திருக்கிறோம்.

இப்படத்திற்கு இசை கே.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு ஸ்ரீ சரவணன், படத்தொகுப்பு மணிகுமரன் சங்கரா.

இன்று இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது.

Read Previous

‘எங்க அம்மா ராணி’ படம் பற்றி இளையராஜா – வீடியோ

Read Next

Srushti Dange Photo Gallery

Most Popular