பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மலையாளத்தில் பிரபலமான நடிகையான நமிதா பிரமோத், பார்வதி நாயர் கதாநாயகிகளாக நடித்து உள்ளனர். சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடித்து படத்திற்கு வசனமும் எழுதுகிறார்.
தர்பூகா சிவா இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவில் மூன்லைட் என்டெர்டைன்மெண்ட் என்கிற புதிய நிறுவனத்தின் சார்பில் சந்தோஷ் டி குருவில்லா தயாரிக்கிறார்.
‘தெறி’ படத்தில் வில்லனாக நடித்த இயக்குனர் மகேந்திரன், அதன் பின்னர் பல்வேறு வாய்ப்புகள் வந்தாலும் அவற்றைத் தவிர்த்திருக்கிறார். ஆனால், இயக்குனர் பிரியதர்ஷன் சொன்ன கதாபாத்திரத்தைக் கேட்டதும் உடனே நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம்.
‘சில சமயங்களில்’ படத்திற்குப் பிறகு பிரியதர்ஷன் தமிழில் இயக்கும் படம் இது.