நயன்தாரா நடிக்கும் ‘கோலமாவு கோகிலா’

’2.0’ படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும் லைக்கா புரொக்சன்ஸ் நிறுவனம் நயன்தாரா நடிக்கும் ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தைத் தயாரிக்கிறது.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று முன்னர் சிவகார்த்திகேயன் டிவிட்டரில் வெளியிட்டார்.

இந்தப் படத்தை நெல்சன் இயக்குகிறார், அனிருத் இசையமைக்கிறார்.

நயன்தாரா தற்போது ‘வேலைக்காரன், அறம், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம்’ ஆகிய தமிழ்ப் படங்களிலும், ‘சைரா – நரசிம்ம ரெட்டி, பாலகிருஷ்ணாவுடன் ஒரு படம்’ என இரண்டு தெலுங்குப் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

‘கோலமாவு கோகிலா’ படம் நாயகி சம்பந்தப்பட்ட ஒரு கதை. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

Read Previous

விமர்சனங்களை மீறி வசூலிக்கும் ‘விவேகம்’

Read Next

ரஜினிகாந்த், ஷங்கரின் 2.0 – மேக்கிங் வீடியோ