இந்தியத் திரையுலகின் மற்றுமொரு பெருமையாக உருவாகி வரும் தமிழ்ப் படமான ‘2.0’ படத்தின் தயாரிப்பு வீடியோ இன்று மாலை யு டியுபில் வெளியிடப்பட்டது.
அந்த வீடியோவைப் பார்த்ததுமே தமிழ் சினிமா வேறு ஒரு உயரத்தில் பயணிக்கத் தயாராகி வருகிறது என்பது உறுதியாகிவிட்டது.
ராஜமௌலி உருவாக்கிய ‘பாகுபலி’ படத்தை விடவும், ‘2.0’ தென்னிந்திய சினிமாவை மட்டுமல்லாது இந்திய சினிமாவையும் இந்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கப் போகிறது என்பதற்கான முன்னோட்டம்தான் இன்று வெளியாகியுள்ள வீடியோ.
இந்த வீடியோ பற்றி அக்ஷய்குமார், “இது ஒரு படம் மட்டுமல்ல, வாழ்க்கையில் ஒரு முறை கிடைக்கும் அனுபவம்”, எனக் கூறியுள்ளார்.
இயக்குனர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, கலை இயக்குனர் முத்துராஜ் ஆகியோரது திறமையான உழைப்பில் இன்று வெளியாகியுள்ள ‘2.0’ வீடியோ யு டியுபில் பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கலாம்.
‘கபாலி’ படத்தின் மூலம் ரஜினிகாந்த் படைத்த சாதனையை திரும்பவும், ‘2.0’ படத்தின் மூலம் ரஜினிகாந்த் மட்டுமே முறியடிக்க முடியும்.
2.0 தயாரிப்பு வீடியோ